குறிகட்டுவான் துறைமுகத்திலும் அடையாள அட்டை பரிசோதிக்கப்படுகின்றது?

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவில் துறைமுகத்தில் ஊடாக நெடுந்தீவில் இருந்து புற்பபடும் அனைத்து மக்களதும் அடையாள அட்டைகளும் நெடுந்தீவு மாவிலித்துறைமுகத்தில் ஸ்கான் செய்யப்பட்ட பின்னரே பயனிகள் யாவும் அனுமதிக்ப்படுகின்றனர்.

இவ்வாறாக பதிவு செய்யப்பட்டு அனுப்பப்படுகின்ற பயணிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிரயாணம் செய்து குறிகட்டுவான் துறைமுகத்தினை வந்தடைகின்றனர் களைப்பின் மத்தியில் வருகின்ற பயணிகளிடம் இன்றைய தினம் (ஆகஸ்ட் 16) குறிகட்டுவான் துறை முகத்தில் வைத்து ஒழுங்கு படுத்தப்பட்டு அனைவரிடமும் அடையாள அட்டைகள் பரிசோதித்து பேருந்து நிற்கும் இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

நெடுந்தீவில் பதியப்படுவதால் குறிகட்டுவானில் மீளவும் அடையாள அட்டைகள் பரிசோதிக்க வேண்டிய தேவைப்பாடுகள் இல்லை இச் செயற்பாடு இன்று மட்டுமா? அல்லது தொடருமா? என்பது தெரியவில்லை

Share this Article