குமுதினிப் படகு திருத்த வேலை தொடர்பில் கள ஆய்வு – சி.சிறிதரன் MP குழுவினர்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு குறிகாட்டுவான் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினிப்படகு திருத்த வேலைகளின் நிலைமையை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழரசுக் கடசியின் நெடுந்தீவு பிரதேச சபை முதன்மை வேட்பாளர் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் மற்றும் குழுவினர் நேற்று (12 ஏப்ரல்) நேரில் பார்வையிட்டார்.

     

வல்வெட்டித்துறை ரேவடி பகுதியில் உள்ள படகு திருத்தும் பகுதியில் இருந்த படகு திருத்த வேலை செய்யும் ஒப்பந்தகார்ருடன் படகு சேவையில் ஈடுபடத்துவது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது.

     

திருத்த வேலையில் 75 வீதமான வேலைகள் முடிவுறுத்தப்பட்ட போதும் அதற்கான கொடுப்பனவு இன்னும் கிடைக்கவில்லை எனவும் அதனால் மிகுதி வேலையினை முடிக்க இயலாத நிலைய்யில் இருப்பதாகவும் தனக்கான கொடுப்பனவை பெற்றுத்தர ஆவனசெய்யுமாறு ஒப்பந்தகாரர் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரியுள்ளதுடன் , அதற்கான ஒழுங்குகளை தாம் விரைவில் மேற்கொள்வதற்கான நடவடிக்கையை உரிய தரப்புகளுடன் தொடர்பு கொண்டு மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article