நெடுந்தீவு குறிகாட்டுவான் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் மீண்டும் இன்று(ஓகஸ்ட் 24) குமுதினிப் படகு சேவையில் இணைந்தது.
குமுதினி படகானது நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் இருந்து பல நெருக்கடிகளின் மத்தியில் திருத்த வேலைகள் யாவும் முடிவுற்று பரீட்சாத்த ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் குறிகாட்டுவானுக்கு எடுத்துவரப்பட்டது.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தரிசனத்தை முடித்து குறிகாட்டுவான் துறைமுகத்தில் சில நாட்கள் தரித்து விடப்பட்ட பின்னர் நேற்றையதினம் மாலை நெடுந்தீவுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வடதாரகை படகானது திருத்தவேலை இடம்பெறவுள்ளதால் அதன் நேர அட்டவணைக்கமைய குமுதினி சேவை இடம்பெறும் என தெரியவருகின்றது.