குமுதினிக்கு பதிலாக இன்று நெடுந்தாரகை சேவையில் ஈடுபடுகின்றது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

குமுதினிப்படகின் சிறு திருத்த வேலைகாரணமாக இன்றைய தினம் குமுதினிப்படகு சேவையில் ஈடுபடவில்லை ஆயினும் குமுதினி படகினது நேர அட்டவணைக்கு அமைவாக நெடுந்தாரகைப் படகு சேவையில் ஈடுபடுகின்றது வரவேற்கத்தக்க விடயம்

குமுதினிப்படகினை திருத்தம் செய்வதற்கான தொழிநுட்ப உத்தியோகத்தர் அவர்கள் வருகை தந்துள்ளதுடன் இன்றைய தினம் அதற்கான வேலைகள் நிறைவு பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது

குமுதினிப்படகு சேவையில் ஈடுபடாத நாட்களில் குமுதினிப்படகின் நேர அட்டவணைக்கு அமைய நெடுந்தாரகை படகினை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கையினை ஏற்கனவே கடற்தொழில் அமைச்சர் கௌர டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தடையின்றி மக்கள் போக்குவரத்து நடைபெறவேண்டும் என்பதே நெடுந்தீவு மக்களது எதிர்பார்ப்பாக உள்ளது.

Share this Article