கிளி. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக முரளிதரன் கடமைகளை பொறுப்பேற்றார்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக உயர் திரு.சு.முரளிதரன் கடமைகளை நேற்று(ஜூலை 10) பொறுப்பேற்றார்.

அவர்கள் நேற்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு முன்னர் இவர், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக (காணி) பதவி வகித்துள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையின் தரம் ஒன்றினைச் சேர்ந்த இவர் தெல்லிப்பளை, சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராகவும், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக(காணி) பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article