கிளிநொச்சியில் பிரசவத்துக்குச் சென்ற பெண்ணின் கருப்பை அகற்றம் – பொலிஸிலில் முறைப்பாடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தனது மனைவியின் கருப்பை அகற்றப்பட்டமைக்கு மருத்துவத் தவறுகளே காரணம் என்று கணவரால் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி பிரசவத்துக்காகத் தனது மனைவி கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும், மறுநாள் 27ஆம் திகதி சத்திரசிகிச்சை மூலம் குழந்தை இறந்த நிலையில் எடுக்கப்பட்டது என்றும், அதன் தொடர்ச்சியாக மனைவியின் கருப்பை அகற்றப்பட்டது என்றும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தனது குழந்தை இறப்பதற்கும், மனைவியின் கருப்பை அகற்றப்பட்டமைக்கும் மருத்துவர்களின் தவறே காரணம் என்று அவர் நேற்றுமுன்தினம் பதிவு செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

Share this Article