கிறிஸ்தவ நாகரீக பாடத்தை இலகுபடுத்த வினா விடை நூல் வெளியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

உயர் தரத்தில் கிறிஸ்தவ நாகரீக பாடத்தினை கற்கும் மாணவர்களின் பரீட்சையினை இலகுபடுத்தும் விதமாக வினா விடைகள் அடங்கிய நூல் ஒன்றினை தொகுத்து அருட்சகோதரி தேவ ஜெனோவா சகாயநேசன் அண்மையில் வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம் முருங்கன் மத்திய கல்லூரி மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் இருதயராஜா குரூஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மன்னார் ஆங்கில ஆசிரிய வாண்மை விருத்தி நிலையத்தை சேர்ந்த திருமதி P.R.J. பீரிஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
நூலின் முதல் பிரதியினைப் பெற்று மதிப்பீட்டுரை ஆற்றியிருந்தார்.

கல்லூரியின் பிரதி அதிபர் ,உதவி அதிபர், வகுதித் தலைவர்கள் ஆகியோர் நூலின் பிரதியினைப் பெற்றுக் பொண்டதுடன் வாழ்த்துரையினையும் வழங்கியிருந்தனர்.

அருட் சகோதரி ஜெனோவா சகாயநேசன் அவர்கள் நெடுந்தீவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article