நெடுந்தீவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு கலாபூசணம் விருது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மாற்றுத்திறனாளி கலைஞர்களுக்கான தேசிய கலாபூசணம் விருது – 2023 வழங்கும் நிகழ்வில் நெடுந்தீவு 08 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிறகோரி பொன்றோஸ் மரியம்மா என்பவருக்கு சிறந்த பாடகருக்கான கலாபூசணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

நேற்று(டிசம்பர் 6) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் , யாழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பு நடாத்திய “சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வில் சங்கவி பிலிம்ஸ் நிறுவனத்தால் கலைத்துறையில் பங்காற்றியமையை கௌரவித்து இவ் விருது வழங்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடிய உடல் நிலை இன்மையால் அவரது சகோதரர் நிகழ்வில் கலந்து கொண்டு விருதிற்கான சான்றிதழ், பதக்கம், நினைவுக் கேடயம் என்பவற்றினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

நெடுந்தீவில் உள்ள தேவலயங்களுக்கு சக்கர நாற்காலியில் சென்று பாடகர் குளாமில் இணைந்து அவர்களை வழிநடத்தி சிறப்பான இசை, பாடல் பணியாற்றியமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article