காவலூர் சிறுத்தைகள் விளையாட்டுக் கழகம் சம்பியன்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வேலணை சலன்சர்ஸ் விளையாட்டு கழகம் நடத்திய சலன்சர்ஸ் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் காவலூர் சிறுத்தைகள் விளையாட்டு கழகம் சம்பியனாகி அசத்தியது.

சலன்சர்ஸ் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கடந்த திங்கட்கிழமை சலன்சர்ஸ் கழக மைதானத்தில் இடம்பெற்றது.

குறித்த இறுதிப் போட்டியில் செட்டிபுலம் ஐயனார் அணியும் காவலூர் சிறுத்தைகள் அணியும் பலப்பரீட்சை நடத்தின.குறித்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற செட்டிபுலம் ஐயனார் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

அதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்து ஆட களமிறங்கியகாவலூர் சிறுத்தைகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 8 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 82 ஓட்டங்களை எடுத்தது.

83 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய செட்டிபுலம் ஐயனார் அணி8 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 46 ஓட்டங்களை பெற்றது. இதன்மூலம் காவலூர் சிறுத்தைகள் அணி 36 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியனானது.

இப் போட்டியின் ஆட்டநாயகன், தொடர் ஆட்டநாயகன் விருதுகளை காவலூர் சிறுத்தைகள் அணி வீரர் யூட் விக்ரர் தட்டிச்சென்றார்.

Share this Article