கார்த்திகை பூச்செடியின் கிழங்கை உட்கொண்ட இளைஞன் பலி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணத்தில் கார்த்திகை பூச்செடியின் கிழங்கை உட்கொண்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியை சேர்ந்த 18 வயதுடைய மாரிமுத்து சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகை பூச்செடியின் கிழங்கை உட்கொண்ட நிலையில், குறித்த இளைஞன் சுகவீனம் அடைந்துள்ளார்.

அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share this Article