காரைநகர் வியாவில் பிரதேச சபை முன்பள்ளியின் சிறுவர் தின நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களை கெளரவிக்கும் முகமாக காரைநகர் வியாவில் பிரதேச சபை முன்பள்ளியில் இன்று (ஒக்ரோபர் 12) சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வு முன்பள்ளி ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றதுடன் விருந்தினர்களாக முன்பள்ளி உதவிப் பணிப்பாளர், காரைநகர் முன்பள்ளி இணைப்பாளர், பிரதேச சபை உப அலுவலக பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ் சிறுவர் தின நிகழ்வில் முன்பள்ளி மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் வியாவில் ஐயனார் ஆலயத்தில் மாலை அனுவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகள் மற்றும் விருந்தினர் உரை என்பன இடம்பெற்றது. உலக சிறுவர் தின நிகழ்வு வருடம் தோறும் ஒக்டோபர் 01இல் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இவ் வருடம் சிறுவர் தினம் “எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்” என்னும் எண்ணக்கருவிற்கு அமைய கொண்டாடப்பட்டு வருகின்றது.

Share this Article