காரைநகர் பிரதேச சபை ஏற்பாட்டில் நடமாடும் சேவை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச சபையின் செயல்நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் மக்களை நாடிய சேவை என்னும் தொனிப்பொருளிலான நடமாடும் சேவை வட்டாரம் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி இன்று(ஜூலை 12) காரைநகர் மத்தி பிரதேசத்திற்கான நடமாடும் சேவை ஸ்ரீ சிதம்பரேஸ்வர சனசமூக நிலையத்தில் இடம்பெற்றதுடன் கணிசமான மக்கள் பங்கு கொண்டு பயன்பெற்றனர்.

இந்த நடமாடும் சேவைக்கான ஒழுங்குபடுத்தல் மற்றும் இதர உதவிகளை சபையின் முன்னாள் உபதவிசாளர் ஆ.விஜயராசா மேற்கொண்டிருந்தார்.

Share this Article