காப்புறுதிப் பணத்துக்காக மனைவி கொன்ற கணவன்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட கொலை என பிடிகல பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மனைவியின் காப்புறுதி இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்காகவே கணவர் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிடிகல மானம்பிட, தல்கஸ்வல நயாகம பிரதேச சபைக்கு அருகில் வீதியோரம் நின்றிருந்த பெண் ஒருவர் கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் இந்தச் சம்பவம் திட்டமிட்ட கொலை என்று கண்டறிந்ததை அடுத்து, பெண்ணின் கணவரைக் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் வயது 40 வயது எனவும் அவரது கணவரின வயது 25 வயது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article