காணமல் போனவர் இறந்த நிலையில் இந்தியாவில் கரையொதிங்கியுள்ளார்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மேற்கு பனங்கானி முனையில் இருந்து கடந்த முதலாம் திகதி (ஜீலை 01) தொழிலுக்கு சென்ற நெடுந்தீவு 08ம் வட்டாரத்தினை சேர்ந்த சில்வெஸ்ரர் மரியதாஸ் (வயது 65) என்பவர் இன்றைய தினம் (ஜீலை 07) இந்தியாவில் சடலாமக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலையில் இந்தியாவின் வேதாரண்யம் கடற்கரையில் கரையொதிங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு தற்போது வேதாரண்யம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து கிடைக்கபெற்ற தகவல்களின் அடிப்படையில் குடும்பத்தினரால் தற்போது சடலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நெடுந்தீவு கடற்தொழிலாளர் சமாசத் தலைவர் அவர்களை தொடர்பு கொண்டு போது பாதுகாப்பு தரப்பினர் மற்றும் உரிய திணைக்களங்களுடன் தொடர்பு கொண்டு அவருடைய சடலத்தினை நெடுந்தீவிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவி;த்துள்ளார்.

Share this Article