கழுத்தில் வெட்டுக்காயத்துடன் வவுனியாவில் இளைஞரின் சடலம் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வவுனியா பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியில் நேற்று (மார்ச் 9) இரவு வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மணியர்குளத்தின் அணைக்கட்டை அண்மித்த பகுதியில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலம் ஒன்று உள்ளது என்று பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பூவரசங்குளம் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் நித்தியநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சக்திவேல் யசோதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் மரணங்கள் அதிகரித்துள்ளன. மூன்று நாள்களுக்கு முன்னர் வவுனியா கற்குழி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்த முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Share this Article