கனடா பிரஜைகள் மீது அனலைதீவில் வாள்வெட்டு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கனடாவில் இருந்து வந்து தங்கியிருந்தவர்களின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் வாள்வெட்டு நடத்திப் பெருந்தொகைப் பணத்தைக் கொள்ளையிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அனலைதீவில் நடந்துள்ளது.

அனலைதீவில் உள்ள தங்களின் வீட்டைத் திருத்துவதற்காக இரு மாதங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து வந்து தங்கியிருந்தவர்கள் மீதே தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது.

நள்ளிரவு வேளை வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த ஒருவர் மீது வாள்வெட்டு நடத்தியதுடன் 3 ஆயிரம் டொலர் மற்றும் கடவுச்சீட்டு போன்ற பொருள்களைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

கனடாவில் இருந்து வந்தவரே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார். வீட்டிலிருந்தவர்களைக் கட்டிவைத்து வீட்டைச் சல்லடையிட்டுத் தேடி 2 ஆயிரம் கனேடிய டொலர் மற்றும் ஆயிரம் அமெரிக்க டொலருடன் இலங்கை நாணயம் மற்றும் கடவுச் சீட்டு என்பற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share this Article