கடும்காற்றால் தரை தட்டியது நெடுந்தீவிலிருந்து வந்த வடதாரகை படகு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையே சேவையில் ஈடுபடும் வடதாரகைப் படகு இன்று (மே 13) கடும் காற்றுக் காரணமாகக் கரைதட்டியுள்ளது.

காலை நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கிப் பயணித்த வடதாரகை கடும் காற்றுக் காரணமாக குறிகாட்டுவான் கரையில் தரைதட்டியது.

அதையடுத்து நயினாதீவுக்கு சேவையில் ஈடுபடும் படகுகள் மூலம் பயணிகள் வடதாரகையில் இருந்து இறக்கப்பட்டு குறிகாட்டுவான் இறங்குதுறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

Share this Article