கடவுச்சீட்டில் கொண்டுவரப்படவுள்ள அதிரடி மாற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இந்த ஆண்டு முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

புதிய கடவுச்சீட்டில் சுயவிபர தகவல்களைக் கொண்ட இலத்திரனியல் அட்டை (சிப்) சேர்க்கப்படும் என்றும், இந்த முறை உலகின் பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், தலைமை அலுவலகம் மற்றும் தற்போதுள்ள நான்கு பிரதான கிளைகள் தவிர்ந்த 54 கிளைகள் நாடு முழுவதும் நிறுவப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share this Article