கடல் மீனை சமைத்துண்ட பெண் ஒருவர் உயிரிழப்பு!- மூவர் மருத்துவமனையில்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நஞ்சுத்தன்மையான கடல்மீனை சமைத்து சாப்பிட்டமையால் ஏற்பட்ட ஒவ்வாமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவர்  உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாங்காட்டில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தாயாரான 27 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார். குறித்த பெண் அவரது 4 மற்றும் 7 வயதான இரு குழந்தைகள் மற்றும் அவரது தாயார் ஆகிய நான்கு பேரும் மதிய உணவை உட்கொண்டதன் பின்னர் மயங்கியதையடுத்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கடல் மீனினமான பேத்தை மீனை உட்கொண்டதன் காரணமாகவே இவ் அனர்த்தம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் 27 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன் எனைய 3 பேரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article