கச்சதீவு அந்தோனியார் ஆலய சிறப்பு பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கச்சதீவு தூய அந்தோனியார் யாத்திரை ஸ்தலத்தின் சிறப்பு பாடல்களை உள்ளடக்கிய இறுவட்டு எதிர்வரும் நான்காம் திகதி இடம்பெறவுள்ள பெருவிழாவில் வெளியிடப்பட்டுள்ளது.

பிறின்சி ரஞ்சித்குமாரின் வரிகளில் அமைந்த பாடலுக்கான இசையை க.சாய்தர்சன் வழங்குகின்றார். அம்மு ரஞ்சித்குமார் பாடலைப் பாடியுள்ளார்.

இலங்கை இந்திய பக்தர்களை தமிழ் உறவுகளாகவும் இணைக்கும் இத்தலத்தில் வெளிவரும் இறுவட்டானது கச்சதீவு தூயவரின் புதுமைகளை பெருமிதத்துடன் பாடுவதாகவும், இருநாட்டு உறவைக் கொண்டாடுவதாகவும், இன்னல்களோடு வாழும் தமிழரின் கவலைகளை எதிர்பார்புக்களுடன் பாடுவதாகவும் வரிகள் எழுதப்பட்டுள்ளன.

இத்தலத்தில் 2023ஆம் ஆண்டுக்கான சிறப்பு பாடலாக வெளிவரும் இறுவெட்டின் வெளியீட்டு விழாவானது நெடுந்தீவு பங்குத்தந்தையும் கச்சதீவு யாஸ்திரை ஸ்தலத்தின் பரிபாலகருமான அருட்பணி வசந்தன் அடிகளார் தலைமையில் இடம்பெறவுள்ளது.

Share this Article