கசூரினா கடற்கரையில் இன்று முன்னெடுக்கப்பட்ட மர நடுகைத் திட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

காரைநகர் கசூரினா கடற்கரையில் மர நடுகைத் திட்டம் இன்று (நவம்பர் 24 ) காரைநகர் பிரதேசசபை செயலாளர் கி.விஜயேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த மரநடுகைத்திட்டத்தின் கீழ் ஒரு தொகுதி சவுக்கு மரங்கள் நடுகை செய்யப்பட்டது.

மரநடுகை நிகழ்வில் யாழ்மாவட்ட வட்டார வனவளத் திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், காரைநகர் தொழிற்பயிற்சி அதிகார சபை உத்தியோகத்தர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

கசூரினா கடற்கரை இயற்கை அழகு பெறும் வகையில் காரைநகர் பிரதேச சபையும் வனத் திணைக்களமும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article