கசூரினா கடற்கரையில் சுத்தப்படுத்தல் மற்றும் மரநடுகை முன்னெடுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நிலைபேண்தகு எதிர்காலத்தை நோக்கிய செயற்திட்டத்தின் கீழ் கடற்கரை சுத்தப்படுத்தல், மரநடுகை ஆகிய நிகழ்வுகள்
கசூரினா சுற்றுலா கடற்கரையில் இன்று(டிசம்பர் 10) காலை சிறப்பாக இடப்பெற்றது.

கொமர்ஷல் வங்கியின் சுன்னாகம், சங்கானை, மானிப்பாய் ஆகிய கிளை நிறுவனங்களும் நீர்வேலி GREEN LAYER – Environmental Organization, Jaffna, அமைப்புடன் காரைநகர் பிரதேச சபையும் இணைந்து கடற்கரை சுத்தப்படுத்தல் மற்றும் மரநடுகை என்பன இடம்பெற்றது.

இச் செயற்றிட்டம் நிலைபேண்தகு எதிர்காலத்தினை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய மரநடுகைத்திட்டம் Green layer org. அமைப்பின் ஏற்பாட்டில் ஒருதொகுதி சவுக்கு மரங்கள் நடுகை செய்யப்பட்டன.

இவ் நிகழ்வில் பிரதேசசபை செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள், கொமர்ஷல் வங்கி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், கிறின்லேயர் அமைப்பின் இயக்குநர், பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this Article