ஒரே நாளில் இரண்டு வெற்றிக் கிண்ணங்களை தனதாக்கிக்கொண்ட நயினாதீவு மத்திய விளையாட்டுக்கழகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நயினாதீவு மத்திய விளையாட்டுக்கழகம் ஒரு நாளில் இரண்டு வெற்றிக் கிண்ணங்களை தனதாக்கிக்கொண்டு சாதனை படைத்துள்ளது.

தீவகத்தில் முதல் முறையாக வளாகம் மற்றும் kayts boys அணி இணைந்து நடாத்திய 2023 ஆம் ஆண்டுக்கான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி லீக் அடிப்படையிலான துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியிலும், காவலூர் சிறுத்தைகள் வெற்றிக்கிண்ண தீவகத்தின் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியிலும் நயினாதீவு மத்திய விளையாட்டுக் கழகம் வெற்றியைத் தனதாக்கி தீவக சம்பியனானது.

வளாகம் மற்றும் Kayts boys நடாத்திய சுற்றுப்போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரராக நயினை மத்திய விளையாட்டுக் கழக வீரர் சி.பிரதீப் அவர்களும் சிறந்த பந்து வீச்சாளராக நயினை மத்திய விளையாட்டுக் கழக வீரர் ஜெ.லக்சனன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

காவலூர் சிறுத்தைகள் போட்டியின் தொடர் ஆட்டநாயகன் மற்றும் ஆட்டநாயகனாக நயினை மத்திய விளையாட்டுக் கழக வீரர் சி.பிரசாந் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இவ்விரு சுற்றுப்போட்டிகளின் இறுதிப் போட்டிகள் நேற்று(செப்ரெம்பர் 30) ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article