ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பயிற்சியை நிறைவு செய்தோருக்கு சுகாதார பணியாளர் நியமனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டு பயிற்சியை நிறைவு செய்த 21 பேருக்கு இன்று (ஜூலை 12) சுகாதார பணியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

நியமனம் வழங்கும் இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன்( நிர்வாகம்), மாவட்ட பிரதம கணக்காளர் திரு.ம.செல்வரட்ணம், மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு.லிங்கேஸ்வரன், மாவட்ட பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.

Share this Article