ஒட்டுசுட்டானில் பனைசார் கைப்பணிப் பயிற்சிநெறி!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஒட்டுசுட்டான் பிரதேசசெயலக பிரிவிற்குட்பட் பனிக்கன்குளம் கிராமத்தில் பனைசார் கைப்பணிப் பயிற்சிநெறி அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பனை வளத்தை நம்பி வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் முல்லைத்தீவு பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் இந்தப் பயிற்சிநெறி முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர் ஆர்.காயத்திரி, மாங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி , பனை அபிவிருத்திச் சபையின் விரிவாக்க முகாமையாளர் ஆ.கௌசிதரன், மாவட்ட முகாமையாளர், கிராம அலுவலர்,சமுர்த்தி அலுவலர் மற்றும் பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Share this Article