ஐக்கியதீப சனசமுக நிலைய மைதான புணரமைப்பு பணிகள் ஆரம்பம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் நாடுபூராகவும் உள்ள 332 பிரதேச செயலக பிரதேசத்திற்கு  ஒரு விளையாட்டு மைதனம் எனும் தொனிப்பொருளில் கிராமிய விளையாட்டு மைதனாங்கள் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் யாழ் மாவட்டதின் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நெடுந்தீவு மேற்கு ஐக்கிய தீப சனசமூக நிலையத்தின் மைதனம் தோ்வு செய்யப்பட்டு அங்குராா்ப்பண நிகழ்வு நேற்றைய தினம் (பெப்பரவாி 02) பிரதேச செயலாளா் மதிப்பிற்குாிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவா்கள் தலமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரின் பிரதிநிதியுமான கௌரவ மாநகரசபைஉறுப்பினர்திரு.எஸ்.சாந்தரூபன்,பொதுஜனபெரமுன கட்சியின் தீவக இனைப்பாளரும் வன ஜீவராசிகள் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான திரு.மாாிமுத்து பரமேஸ்வரன் அவா்கள், நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் நல்லதம்பி சசிகுமாா் அவா்கள் நெடுந்தீவு பிரதேச சபை செயலாளர், இளைஞர் சேவை உத்தியோகத்தர், விளையாட்டு உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர்கள், பிரதேச செயலக அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள்ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this Article