ஏ.ரி.எம். இயந்திர கட்டடம் மீது தாக்குதல் – ஒருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டுப் பகுதியிலுள்ள இலங்கை வங்கியின் ஏ.ரி.எம். இயந்திரத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று (ஜனவரி 2) திங்கட்கிழமை இரவு நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் வங்கி முகாமையாளரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article