எழுவைதீவு பொது மண்டபத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மருத்துவ முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு பொது மண்டபத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி மருத்துவ முகாம் இடம்பெறவுள்ளது.

ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள மருத்துவ முகாமில் எழுவைதீவு மக்களை தவறாது கலந்து கொள்ளுமாறு எழுவைதீவு ஆரம்ப வைத்தியசாலையினர் அறிவித்துள்ளனர்.

இரத்த பரிசோதனை செய்யவுள்ளோர் நாளைமறுதினம்(ஜூன் 17) இரவு 8.00மணிக்கு பின்னர் எந்தவித உணவு, நீராகாரம் உட்கொள்ளாது பரிசோதனைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு தங்களை தயவுடன் கேட்டு நிற்கின்றனர்.

எழுவைதீவில் இந்த வருடம் நடைபெறும் இரண்டாவது மருந்து முகாம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article