எழுவைதீவு பொது நூலக வாசகர் வட்டக் குழுவுக்கான நிர்வாகத் தெரிவு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

எழுவைதீவு பொது நூலக வாசகர் வட்டக் குழு மற்றும் ஆலோசனை சபை என்பவற்றுக்கான நிர்வாகத் தெரிவு நேற்று (ஓகஸ்ட் 14) காலை ஊர்காவற்றுறை பிரதேச சபை செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

ஆலோசனை சபை தலைவராக ஊர்காவற்றைறை பிரதேச சபை செயலாளர் அ. பிரதீபன், செயலாளராக பொது நூலக பொறுப்பாளர் அ. யொனிற்றன் யோசப் , உபதலைவராக முன்னாள் கிராம அலுவலர் இ. சுந்தரலிங்கம், உப செயலாளராக ஆசிரியை யே. அன்ரனிக்கா ஆகியோருடன் நிர்வாகசபை உறுப்பினர்களாக இ. செல்லத்துரை, சா. மேரி சானுசா, ஜே. கரிப்பிரதாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த நிகழ்வில் நூலக வாசகர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் , பொது அமைப்பு பிரதிநிதிகள் ,மதகுருமார் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Share this Article