எழுவைதீவு பொதுநூலகத்தில் அனுபவ பகிர்வு நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

எழுவைதீவு பொதுநூலகத்தில் கடந்த 25 ஆம் திகதி வாசிப்பினை ஊக்கப்படுத்தல் தொடர்பான அனுபவாயிலான பகிர்வு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

எழுவைதீவின் மைந்தரும் , அவுஸ்ரேலியா நாட்டின் வைத்தியரும், சிறுகதை மற்றும் நாவல் எழுத்தாளருமான வைத்தியர் நெல் நடேசன் அவர்களினால் வாசிப்பினை ஊக்கப்படுத்தல் தொடரபாக கருத்துரை வழங்கப்பட்டதுடன், அவருடைய பாரியார் வைத்தியர் திருமதி நடேசன் அவர்களால் உணவுப்பழக்க வழக்கம் மற்றும் யோகா பயிற்சிமுறை என்பன தொடர்பான விளக்கமும் வழங்கப்பட்டது.

சிறுகதை மற்றும் நாவல் எழுத்தாளரான வைத்தியர் நெல் நடேசன் அவர்களை கௌரவிக்கும் வகையில் “எழுவைத்திருமகன்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதேவேளை எழுவைதீவு வைத்தியசாலை அமைக்க இவரது குடும்பத்தினர் பெரும் உதவிக்கரம் கொடுத்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article