எழுவைதீவு உப அலுவலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் எழுவைதீவு உப அலுவலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் கடந்த 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. நிகழ்வில் கலை நிகழ்வுகளுடன், விருந்தினர்களின் உரைகளும் நடைபெற்றன.

நிகழ்வில் பிரதம விருந்தினராக ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தின் கலாசார் அபிவிருத்தி உத்தியோகத்தர் சைவப் புலவர் பொன். சந்திரவேல் கலந்து கொண்டார்.

கௌரவ விருந்தினர்களாக எழுவைதீவுபுனித தோமையார் ஆலய பங்குத் தந்தையும், புனித தோமையார் முன்பள்ளிப் போசகருமான அருட்பணி எஸ். அலின் கருணாகரன், எழுவைதீவு முருகன் தேவஸ்தான குருக்கள் ஸ்ரீ சிவ.யோகராஜா, ஊர்காவற்றுறை பிரதேச சபையின் உப தவிசாளர் கு.கிளாரன்ஸ், ஊர்காவற்றுறைப் பிரதேச சபை உறுப்பினர் அ.அருள்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக ஊர்காவற்றுறைப் பிரதேச செயலாளர் அ.பிரதீபன், எழுவைதீவு றோ.ம.கத்தோலிக்க வித்தியாலய அதிபர் இ.கயூறன், எழுவைதீவு முருகவேள் வித்தியாலய அதிபர் ஜெ.கொலின்ஸ்ரன், எழுவைதீவு புனித தோமையால் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் அ.யஸ்ரின் பெனாண்டோ, எழுவைதீவு பத்திமா சனசமூக நிலையத் தலைவர் லோ.லோறன்ஸ் சாள்ஸ் குயின்சன், எழுவைதீவு மாணிக்கவாசகர் சனசமூக நிலையத் தலைவர் அ.அமலோற்பநாயகி ஆகேியோர் கலந்து கொண்டனர்.

 

Share this Article