எரிவாயு சிலிண்டர் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சமையல் எரிவாயு விலைகளை லிட்ரோ நிறுவனம் திருத்தியுள்ளது. இதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலையாக 3,186 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 181 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 1,281 ரூபாயாகவும் 2.3 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 598 ரூபாயாகவும் கூறப்படுகிறது.

இன்று (ஜூன் 4) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article