ஊர்காவற்துறையில் பொருண்மியம் நலிந்த குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

பூமணி அம்மா அறக்கட்டளையினரால் ஊர்காவற்துறை பிரதேச பகுதியில் வசிக்கும் வறிய நிலையிலுள்ள 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக குடும்பம் ஒன்றிற்கு 2,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் நேற்று(ஓகஸ்ட் 14) வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வுக்கு நிதி அனுசரணையினை வேலணையூரைச் சேர்ந்தவர்களும் தற்போது கனடா,மொன்றியலில் வசிப்பவர்களுமான, திரு.திருமதி இராசா பாலேந்திரன்,சித்திரா அவர்கள் வழங்கியிருந்தனர்.

குறித்த நிகழ்வானது, ஊர்காவற்துறை நீதிமன்ற,சிறுவர் நன்நடத்தை பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் லீனஸ் யூட்ஸி தலைமையில் நடைபெற்றதுடன், இன்றைய நிகழ்வில் நிகழ்விற்கான நிதிக் கொடையாளர்களுடன் அறக்கட்டளையின் இலங்கைக்கான,செயலாளரும்,முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் ந.விந்தன் கனகரட்ணம்,அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம், நிர்வாகசபை உறுப்பினர் சா.தவசங்கரி,ஓய்வு நிலை ஆசிரியர் கிறிஸ்தோத்திரம் லீனஸ் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்து உதவிப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

Share this Article