உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞன் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
மட்டக்களப்பு ஆயித்தியமலைப் பகுதியில் வயலை உழுது கொண்டிருந்தபோது  உழவு இயந்திரம் தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆயித்தியமலை நெல்லூரைச் சேர்ந்த 34 வயதுடைய தர்மதாசா சதீஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதையடுத்து அவர் கீழே விழுந்ததில் கலப்பையில் தலை அடிபட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
Share this Article