உள்ளூராட்சித் தேர்தலுக்காக அஞ்சல் மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு காலவரை இன்றிப் பிற்போடப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அஞ்சல் வாக்களிப்புக்குத் தேவையான வாக்குச்சீட்டை அச்சிடுவதற்கான நிதி திறைசேரியால் விடுவிக்கப்படாமையே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

எதிவரும் 22ஆம், 23ஆம், 24ஆம் திகதிகளில் அஞ்சல் வாக்களிப்பை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இந்த அறிவிப்பால் உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியில் நடைபெறுவது சாத்தியமில்லை என்று கூறப்படுகின்றது.

Share this Article