உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி பிற்போடப்படும்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கவிருந்த நிலையில், மதிப்பீட்டுப் பணிகள் சில நாள்களுக்குப் பிற்போடப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்துப் பதிலளித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் நிலை குறைவடைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

இதன்காரணமாக விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் சில நாள்களுக்கு பிற்போகக்கூடும் என்று அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு போதுமானதல்ல என்பதால் சில ஆசிரியர்கள் அந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Share this Article