உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட திகதியில் நடக்கும்!- பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

2023 ஆம் ஆண்டு நடைபெறவேண்டிய உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை பரீட்சை திணைக்களம் தீர்மானித்ததுடன் அதற்கான பணிகளிலும் ஈடுபட்டுவருகிறது.

உயர்தரப் பரீட்சை முன்னர் திட்டமிட்டபடியே நடைபெறும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (நவம்பர் 22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அதில் வழக்கு எண். SC/ FR/240/2023 தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கு எண். SC/ FR/254/2023 மனுதாரர்களால் மீளபெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share this Article