உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதனை, பரீட்சைகள் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

அத்துடன், அனுமதி அட்டடைகளுடன் பரீட்சை கால அட்டவணையும் அனுப்பி வைக்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

எவே, பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் இருந்து அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என திணைக்களம் சுட்டிக்காட்டி உள்ளது.

Share this Article