உத்வேகத்துடன் ஈபிடிபி இருக்கின்றது என நெடுந்தீவு மக்களிடம் எடுத்துச்செல்லுங்கள் – டக்ளஸ்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மக்களின் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும்  நிறைவேற்றுவதற்கான உத்வேகத்துடன் ஈழ  மக்கள் ஜனநாயகக்   கட்சி இருக்கின்றது என்ற செய்தியை நெடுந்தீவு மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார் டக்ளஸ்தேவானந்தா.

நெடுந்தீவு பிரதேச சபைக்கான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களுடனான சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்திருந்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

கட்சியின் கடந்த கால செயற்பாடுகளை தற்போதைய இளையதலைமுறையினர் மத்தியில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் , 1991 ஆம்ஆண்டு கைவிடப்பட்ட நிலையில்  பசியுடன் இருந்த மக்களின் அழைப்பை ஏற்று, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நெடுந்தீவில் கால் பதித்த ஈழ மக்கள்ஜனநாயகக் கட்சி அந்தப் பிரதேசத்தினை மீளகட்டியழுப்பியமைகுறிப்பிடத்தக்கது என மேலும் தெரிவித்திருந்தார்.

Share this Article