இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கொடுத்துள்ள உறுதிமொழி – மீட்சியடையுமா இலங்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, சர்வதேச நாணய நிதியம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முயற்சியில், பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் உறுதிபூண்டுள்ளது.

தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் வலுவான முன்னெடுப்புக்கள் வரவேற்கத்தக்கன.

இலங்கை மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்’ என்று அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this Article