இன்று முதல் தடையற்ற மின் வழங்கல் – எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இன்று (பெப்ரவரி 16) நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இன்று விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மக்கள் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார் என்றும், அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் அங்கீகாரத்துடன், நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காக 22 பில்லியன் ரூபா மேலதிக கடனாக வழங்குவதற்கு இலங்கை வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது என்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

Share this Article