இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ள எரிபொருள் விலைகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

எரிபொருள் விலை இன்று (ஏப்ரல் 30) நள்ளிரவு முதல் குறைக்கப்படுகின்றது என்று எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரொன்றின் விலை 7 ரூபாவால் குறைக்கப்படுகின்றது. புதிய விலை 333 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றரொன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 365 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் லீற்றரொன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்படுகின்றது. புதிய விலை 310 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் லீற்றரொன்றின் விலை 135 ரூபாவால் குறைக்கப்படுகின்றது. புதிய விலை 330 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் விலையில் எவ்விதமான விலை மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.

Share this Article