இந்தியாவில் தஞ்சமடைந்த மேலும் எட்டு இலங்கையர்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் இருந்து படகு மூலம் நேற்றுமுன்தினம்(ஜூலை 14) இரவு 8 பேரும் தனுஷ்கோடிக்கு பயணித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மற்றும் ஆணைக்கோட்டை – கூழாவடியைச் சேர்ந்த இரு பெண்கள், இரு ஆண்கள் மற்றும் நான்கு சிறுவர்களே அகதிகளாக சென்றுள்ளனர்.

இவர்கள் தொடர்பில் தமிழக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article