இந்தியாவிடமிருந்து இலங்கை பெற்றுக்கொண்ட கடனுக்கு 12 வருடகால அவகாசம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இந்தியாவிடமிருந்து இலங்கை பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துவதற்காக 12 வருடகால அவகாசத்தை இந்தியா வழங்கவுள்ளதாக இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாத கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று மேலும் தெரிவித்ததாவது, இலங்கையின் கடன்சுமையை குறைப்பதற்காக இலங்கை தன்னிடம் பெற்ற கடன்களை மீளத் திருப்பிச் செலுத்துவதற்கு 12 வருடகால அவகாசத்தை இந்தியா வழங்கக்கூடும்.

சர்வதேச நாணயநிதியத்துடனான இலங்கையின் பேச்சுக்கள் தொடர்கின்றன. இந்தப் பேச்சுக்கள் முடிந்தபின்னர் மறுசீரமைப்பு தொடர்பான திட்டம் வெளியாகும்.

நாங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் எங்கள் பணத்தை மீட்டெடுப்போம். உண்மையில் 3 – 4 வருடங்களில் இந்தக் கடனை மீட்க வேண்டும். ஆனால் இந்தியா 10 – 12 வருடங்களுக்கு தவணை நீடிப்புச் செய்ய வாய்ப்புள்ளது – என்றார்.

Share this Article