ஆலமாவனப் பிள்ளையாா் திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்ற வருகின்றது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கிழக்கு ஆரமாவனப் பிள்ளையார் ஆலய மகோற்சவ திருவிழா நிகழ்வுகள் மிக சிறப்பாக கடந்த 09 நாட்களும் நடந்து வருவதுடன் இன்றைய தினம் தீர்;த்த திருவிழாவும், தொடர்;ந்து நாளை பூங்காவனத் திருவிழாவுடன் நிறைவுக்கு வரும்.

இத்திருவிழாவுடன் திருவெம்பாவை திரும்பள்ளி எழுச்சி என்பனவும் ஆலய அறங்காவலர் சபையினரால் சரியான முறையில் நிர்வகிக்ப்பட்டு மிக நேர்த்தியான முறையில் கொவிட் 19 அசாதாரண சூழ்நிலையிலும் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சிறப்பான முறையில் ஆலய அலங்கார வேலைகள், பூஜை ஒழுங்கு முறைகள் சுகாதர முறைப்படி காலை மதிய அன்னதான நிகழ்வுகள் சிறப்பான ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருவகின்றமையால் பக்தர்கள் சென்று அருளைப் பெற்று வருகின்றார்கள்.

நேற்று முன்தினம் வேட்டைத்திருவிழாவும், நேற்றைய தினம் தேர்த்திருவிழாவும் மிக சிறப்பாக இடம் பெற்றதுடன் இன்றைய தினம் தீர்த்த திருவிழா இடம் பெறவுள்ளதுடன் நாளை மாணவர்களு;கான பண்ணிசைப் போட்டியும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article