ஆயிரம் மில்லியன் ரூபா சிறுபோக நெல் கொள்வனவுக்கு ஒதுக்கீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெல் கொள்வனவிற்காக 1,000 மில்லியன் ரூபாவை விடுவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு அமைய நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

அதற்கமைய, சிறுபோக செய்கையில் அறுவடை செய்யப்பட்டுள்ள நெல், ஒரு கிலோகிராம் 90 முதல் 95 ரூபாவிற்கு கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நெல்லுக்கான உரிய விலை கிடைப்பதில்லை என நாட்டின் பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article