ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்தவர்களுக்கு ஆசிரிய நியமனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிழக்கு மாகாணத்தில் தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ள 48 டிப்ளோமாதாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரிய நியமனம் நேற்றுமுன்தினம்(ஜூலை 8) வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

2017 ஆம் ஆண்டு தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியை நிறைவுசெய்த ஆங்கில டிப்ளோமாதாரிகள், கிழக்கு மாகாணத்தின் உரிய அதிகாரிகளிடம் தங்களது நியமனம் தொடர்பிலான கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

எனவே, ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய அவர்களுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Share this Article