அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் இடம்பெற்ற புத்தகக் கண்காட்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நூலக வாரசெயற்பாடாக நேற்று(ஒக்ரோபர் 26) புத்தகக் கண்காட்சி பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக ஓய்வுநிலை வேலணை கோட்டக் கல்விப் பணிப்பாளர் கார்த்திகேசு சசிதரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக உதவிக் கல்விப்பணிப்பாளர் சி.ஜெகன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பாடசாலை நூலகத்திற்காக புதிதாக 250 நூல்கள் மற்றும் அதற்கான அலுமாரிகளை பழைய மாணவர் அன்ரனிதாஸ் யேசுதாசன்  அவர்கள் அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article