அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் கோர விபத்து!- இளம் யுவதிகள் இருவர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை வீதியில் அல்லைப்பிட்டி சந்திக்கு அருகாமையிலுள்ள அலுமினிய தொழிற்சாலைக்கு முன்னால் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு இளம் யுவதிகள் இன்று (மே 1) மாலை 4.00 மணியளவில் உயிரிழந்துள்ளனர்.

காரில் பயணித்த நால்வரும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாக பொலிஸார் கூறினர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு பெண்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மானிப்பாயைச் சேர்ந்த காரில் பயணித்த நால்வரும் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article