அல்லைப்பிட்டி கடற்கரையில் துப்புரவுப் பணி முன்னெடுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாக்கும் வாரத்தை முன்னிட்டு இன்று (செப்ரெம்பர் 20) அல்லைப்பிட்டி கடற்கரையில் துப்புரவுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாவட்ட கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டிலும் தாரணி சூப்பர்மார்க்கெட் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பிலும் இந்த துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வானது மாவட்ட உத்தியோகத்தர் தலைமையில் வேலணை பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், தப்ரபேன் சீபுட் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் போன்றோரின் பங்குபற்றலுடன் வெற்றிகரமாக இரண்டாம் நாள் நிகழ்வு நடாத்தி முடிக்கப்பட்டது.

Share this Article